திருப்பரங்குன்றத்தில் போராட்டம்; தொடர் பதற்றம் - நயினார் நாகேந்திரன் கைது!
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர் பதற்றம்
திருப்பரங்குன்றத்தில், தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருக்கிறார்.

இதனால் திருப்பரங்குன்றத்தை நோக்கி பாஜகவினர் அதிக அளவில் திரண்டிருந்தனர். ஆனால், அவர்களை மலை மீது ஏறவிடாமல் காவல்துறை தடுத்துள்ளது.
நயினார் நாகேந்திரன் கைது
144 தடை உத்தரவு ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. எனவே பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். தொடர்ந்து சாலையில் அமைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சம்பவ இடத்தில் சுமார் 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
நயினார் நாகேந்திரனுடன், எச்.ராஜா மற்றும் பாஜக, இந்துத்துவா அமைப்பினர் சிலரும் கைது செய்யப்பட்டனர்.