இனி அப்படி கேட்டா செருப்பாலேயே அடிப்பேன் - சட்டென கோபமடைந்த திருநாவுக்கரசு
தமிழக மாற்று கட்சி முக்கிய பிரபலங்கள் தங்கள் கட்சியில் இணைவதாக தெரிவித்த நிலையில், அது யாராக இருக்கும் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளது.
பாஜகவில் இணைகிறார்கள்
தமிழக பாஜக தற்போது வளர்ந்து வரும் கட்சியாக இருக்கும் சூழலில், கடந்த இரண்டு நாட்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து வரும் சூழலில், கட்சியில் யார் யார் இணைவார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
அதிமுக முத்த தலைவரான எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசு என பலரின் பெயர்களும் இதில் அடிபடுவதாக கூறப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி ரத்தான நிலையில், அந்த சஸ்பென்ஸ் தற்போது நீடித்து வருகின்றது.
திருநாவுக்கரசு பதில்
இந்நிலையில் தான், இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசு கோபமடைந்துள்ளார்.
அது குறித்து பேசும் போது, அப்படி பேசுபவர்களை செருப்பாலே அடிக்கவேண்டும் என்று கோபப்பட்ட அவர், இனி சீமான் போன்று தான், இப்படி கேள்வி கேட்டால் அப்படி தான் பதில் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.