தமிழில் தானே சொல்கிறேன் - வேண்டுமென்றால் ..!! எல்.முருகன் ஆவேசம்
கோவையில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
மாற்று கட்சியினர்...
விஜயதரணி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து மாற்று கட்சியினர் பலரும் குறிப்பாக கோவையில் முக்கிய தலை ஒன்று பாஜக பக்கம் செல்லவுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியானது.
அதற்காக தனியாக நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் போன்றோர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் பேட்டிகளும் அளித்திருந்தனர்.
பத்திரிகையாளர்களும், கட்சியினரும் ஆர்வமாக இந்த நிகழ்ச்சியை நோக்கி காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அதன் காரணமாகவே தமிழக பாஜக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.
தமிழில் தானே...
அதனை குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் தொடர்ந்து செய்தியாளர்கள், ஏன் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது என்று கேள்வி கேட்க ,பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது என அவர் பதிலளித்தார்.
ஆனாலும் தொடர்ந்து செய்தியாளர்களை அதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க, நிதானமிழந்த எல்.முருகன் தமிழ்மொழியில்தானே சொல்கின்றேன், இந்தியில் வேண்டுமென்றால் சொல்லட்டுமா என ஆவேசத்துடன் தெரிவித்தார்.