யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் எச்சரிக்கை!

Youtube Tamil nadu
By Sumathi Aug 19, 2022 12:59 PM GMT
Report

தேச பாதுகாப்பிற்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்படும் சமூக ஊடகம் தடை செய்யப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

ஒண்டிவீரன் நினைவு தபால்தலை

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையிலும், அவர்களது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை ஒண்டிவீரன் நினைவு தபால்தலை மத்திய அரசு மூலமாக வெளியிடப்பட இருக்கிறது.

யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் -  மத்திய இணை அமைச்சர் எல். முருகன் எச்சரிக்கை! | L Murugan About Youtube Channels

   இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், இன்று மதியம் தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையம் வந்தார்.

 இணை அமைச்சர் எல்.முருகன்

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நம் இந்தியா 100 ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நம் நாடு 100வது சுதந்திர தினத்தில் போற்றப்படக்கூடிய நாடாக, வளர்ச்சி அடைந்த நாடாக, பெருமை மிக்க நாடாக அனைத்தும்,

அனைத்து மக்களுக்கும் கிடைக்க கூடிய நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் இணைந்து வேலை செய்ய வேண்டும். இந்த ஆகாதிக் அம்ருத் மகா உற்சவத்தின் ஒரு பகுதியாக, அறியப்படாத வீரர்கள் நிலை பற்றி தமிழகத்தில் குறிப்பாக,

ஒண்டிவீரன் 251வது நினைவு தினம்

வீரபாண்டிய கட்டபொம்மன் பூலித்தேவன், வேலுநாச்சியார், அவர்களுடைய கதையை நாம் தூர்தர்ஷனில் ஒளிபரப்ப இருக்கிறோம். நாளை ஒரு மிக முக்கியமான நாள் அறியப்படாத நாள் என்று சொல்லக்கூடிய ஒண்டிவீரன் 251வது நினைவு தினம்,

அவருடைய நினைவு தினத்தை போற்றும் விதமாகவும், அதேபோல சுதந்திர இந்தியாவில் 75 முடிந்து 76ல் பிறந்த அந்த நாளையும் முன்னிட்டு, அவரை போற்றும் விதமாக அவருடைய எண்ணத்தைப் பாராட்டியும், அவருடைய செயலைப் பாராட்டியும்,

 கண்காட்சி

அவருடைய செயலை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசாங்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் தபால் தலை வெளியிட இருக்கிறது. தமிழக ஆளுநர் வெளியிட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செவுந்தரராஜன் பெற்றுக் கொள்ள இருக்கிறார்.

மேலும், பி வோஸ் என்று சொல்லக்கூடிய மாஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பில் 10 நாட்களுக்கு அறியப்படாத ஹீரோஸ் என்ற சொல்லிற்கேற்ப வெளியில் கொண்டு வரும் விதமாக, பத்து நாட்கள் தொடர்ந்து கண்காட்சியானது திருநெல்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் இருந்து அதிகமான, குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி தென் தமிழகத்தில் சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து போரிடுவதில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.

 யூடியூப் சேனல்கள்

அவர்களின் ஒவ்வொருவருடைய வரலாறும், ஒவ்வொருவருடைய வீரமும், ஒவ்வொருவருடைய போற்றுதலும் இன்றைய சமுதாயத்திற்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சிகளை மத்திய அரசு சார்பில் நடத்தப்படுகிறது. 

மூக ஊடகங்களில் அவதூறாக பல விஷயங்கள் சில தேவை இல்லாத பல கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி? குறித்து அவர் கூறுகையில், கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் உள்ளது. அதற்கு ஒரு எல்லை இருக்கிறது.

இந்திய அரசுக்கு எதிராக இந்திய ராணுவத்துக்கு எதிராக இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக ஏதாவது நிறுவனம் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட யூடியூப் (youtube) சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்றும் இந்திய நாட்டிற்கு எதிராக தேசத்திற்கு எதிராக கருத்துக்களை சொன்ன பத்து சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில சமூக ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அங்கிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேசத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் எந்த youtube ஆக இருந்தாலும் எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.