பக்தர்களே.. நீங்கள் எதிர்பார்த்த சனிப்பெயர்ச்சி எப்போது தெரியுமா? அவசியம் படிங்க
சனிப்பெயர்ச்சி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் சனிப்பெயர்ச்சி விழா குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்தாண்டு மார்ச் 6ம் தேதி நடைபெறும்.
அன்றைய தினம் காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். அடுத்தாண்டு மே-23ம் தேதி கோயில் கொடியேற்றமும், ஜுன்-06ல் திருத்தேரோட்டமும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எப்போது?
இது தொடர்பாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் வெளியிட்ட செய்திகுறிப்பில், அருள்மிகு ஸ்ரீசனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் "வாக்கிய பஞ்சாங்கம்" முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம்.
இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும் என தெரிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.