4 எம்.எல்.ஏ, 2 எம்.பி இருந்தும் கொடி ஏற்ற முடியவில்லை - திருமாவளவன் வேதனை
சனாதன தர்மம், மனுஸ்மிருதி, வர்ணாஸ்ரமம்தான் தற்போதும் நடைமுறையில் இருக்கிறது என திருமாவளவன் பேசியுள்ளார்.
திருமாவளவன்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட சட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் மாநாடு சென்னையில் நேற்று (01.03.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டம் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டுள்ளன.
கொடி ஏற்ற முடியவில்லை
அரசியல் ரீதியாக நாம் வலிமை பெறப்போகும் போதுதான், அதிகார வர்க்கத்தை நாம் செயல்பட வைக்க முடியும். இன்றைக்கு 4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பி.க்கள் வைத்திருக்கிறோம். ஆனால் இன்றும் கொடி ஏற்றுவதில் நமக்கு பிரச்சனை இருக்கிறது.
அவ்வளவு எளிதாக நம்மால் ஒரு இடத்தில் கொடி ஏற்ற முடியவில்லை. அவ்வளவு எளிதாக ஒரு இடத்திற்கு சென்று கொடி ஏற்ற முடியவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றும்போதுதான் அதிகாரிகள் சட்டங்களை பேசுவார்கள். வேறு எந்த இடத்திலும் கொடி ஏற்றினால் அதனை அதிகாரிகள் கேட்கமாட்டார்கள். பேனர் வைத்தால் உடனடியாக அகற்றுவார்கள்.
அதனால்தான் நாம் இன்னும் அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டிய தேவை உள்ளது. இது போதாது என்ற போதாமையை காட்டுகிறது. தேர்தல் மற்றும் அரசியல் களத்தில் மட்டுமே அரசியலமைப்பு சட்டம் நடைமுறையில் இருக்கிறதே தவிர. சமூகத் தளத்தில் பண்பாட்டுத் தளத்தில் நடைமுறைக்கு வரவில்லை. சனாதன தர்மம், மனுஸ்மிருதி, வர்ணாஸ்ரமம்தான் தற்போதும் நடைமுறையில் இருக்கிறது" என பேசினார்.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
