தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மத்திய பாஜக அரசு தயாராக இல்லை - திருமாவளவன்!
யுஜிசி நெட் தேர்வைப் பண்டிகை காலத்தில் நடத்துவதன் மூலம் தமிழக மக்களின் கலாச்சாரத்தை அவமதிக்கும் செயல் என்று திருமாவளவன் கூறினார்.
யுஜிசி நெட்
சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சையை உருவாக்கக் கூடியவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். தமிழக அரசுக்குத் தலைவலி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு ஆட்சி நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டைபோடுகிறார்.
பதவிக் காலம் முடிந்த பிறகும் ஆளுநர் பதவியில் இருந்து வருகிறார். அவரை மீண்டும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசியாவர்,திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பாஜக
நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கூலிப்படை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
மேலும் பண்டிகை காலத்தில் வைக்கப்படும் யுஜிசி நெட் தேர்வு குறித்த கேள்விக்கு,’’தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மத்திய பாஜக அரசு தயாராக இல்லை. யுஜிசி நெட் தேர்வைப் பண்டிகை காலத்தில் நடத்துவதன் மூலம் தமிழக மக்களின் கலாசாரத்தை அவமதிக்கின்றனர்.
மத்திய பாஜக அரசின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக கூறினார்.