கூட்டணி கணக்குகள் உள்ளன - ஆனாலும்..! சிதம்பரத்தில் மீண்டும் திருமா போட்டியா..?
வரும் மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி கணக்கு
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமாக 4 தொகுதிகள கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணி குறித்து பேசும் போது, திமுக கூட்டணியில் ஒரு தனி தொகுதி உட்பட 4 தொகுதிகளை கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிதம்பரத்தில் தான்..
ஆனால், கூட்டணியில் நிறைய கட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தொகுதி பங்கீடு குறித்து முறையாக பேசி முடிவெடுக்கப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்கள் என்று கேட்கப்பட்ட போது, சிதம்பரம் தான் என்னுடைய சொந்த தொகுதி என குறிப்பிட்ட திருமாவளவன், இம்முறையும் இந்த தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று தெரிவித்தார்.