தமிழ் மீது உள்ள அக்கறையிலே பெரியார் விமர்சித்தார் - திருமாவளவன் விளக்கம்

Periyar E. V. Ramasamy Thol. Thirumavalavan Seeman Tamil
By Karthikraja Jan 10, 2025 05:55 AM GMT
Report

சீமானின் பேச்சு அவர் பேசுகின்ற அரசியலுக்கே எதிராகவே முடியும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான், பெரியார் குறித்து பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

seeman speech about periyar

சீமானின் பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். 

நானும் திருட்டு கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்; பெரியாரை தாத்தா என்றேன் - சீமான்

நானும் திருட்டு கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்; பெரியாரை தாத்தா என்றேன் - சீமான்

திருமாவளவன்

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

thirumavalavan

அதற்கு பதிலளித்த அவர், "அண்மைக் காலமாக பெரியார் மீது ஆதாரம் இல்லாத அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியல் செய்யும் கட்சிகள் பெரியாரை இழிவுபடுத்துகிறது. 

சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக இருக்கிறது. குதர்க்கவாதமாகவும் இருக்கிறது. அவர் பேசுகின்ற அரசியலுக்கே எதிராகவே இது முடியும். தேசிய அளவில் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் முன்னெடுக்கிற மதவழி தேசியம்தான் மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். அதுதான் தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாக இருக்க முடியும்.

அக்கறையில் விமர்சனம்

அதை விடுத்து தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் தனது இறுதி மூச்சு வரை தீவிரமாக களப்பணி ஆற்றிய பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

thirumavalavan

அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால் சீமான் பேசுவது எத்தகைய அரசியல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது யாருக்கான அரசியல் என்பதை சீமான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காட்டுமிராண்டி காலத்தில் இருந்து தமிழ் பேசப்படுகிறது என்று தொன்மையை பேசுவதற்காக பெரியார் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

பெரியார் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் இருந்த அக்கறையில் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழ் மொழியில் புதுமை இல்லை, காலத்தின் வளர்ச்சிக்கேற்ப புதிய சொற்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையில் அவர் பேசியதை திரித்து பேசுகிறார்கள். பெரியாரின் தியாகத்தை கொச்சைப்படுத்து ஏற்புடையதல்ல" என பேசியுள்ளார்.