நானும் திருட்டு கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்; பெரியாரை தாத்தா என்றேன் - சீமான்

Periyar E. V. Ramasamy Seeman Tamil
By Karthikraja Jan 09, 2025 10:08 AM GMT
Report

பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு ஆதாரம் கேளுங்கள் தருகிறேன் என சீமான் கூறியுள்ளார்.

தபெதிக போராட்டம்

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தபெதிக போராட்டம்

இதை கண்டித்து சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சொன்னதாக கூறிய கருத்துக்கு சீமான் ஆதாரம் தரும் வரை போராட்டம் நடத்தவோம் என கூறினர்.

பாலியல் இச்சையை தாயுடன் தீர்த்து கொள்ள சொன்னாரா பெரியார்? சீமான் பேச்சால் சர்ச்சை

பாலியல் இச்சையை தாயுடன் தீர்த்து கொள்ள சொன்னாரா பெரியார்? சீமான் பேச்சால் சர்ச்சை

சீமான்

இந்நிலையில் இன்று(09.01.2025) புதுச்சேரிக்கு வந்த சீமானிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், "3,000 ஆண்டுகளாக இருக்கும் உங்கள் தமிழ்த்தாய் உங்களையெல்லாம் படிக்க வைத்தாரானு கேக்கறீங்க? அப்படியென்றால் 3,000 ஆண்டுகளாக படிக்காமல்தான் கம்பன், கபிலன், இளங்கோ வந்தானா?

seeman about periyar

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை எதிரிகள் என்று கூறியது யார்? தமிழர் என பேசுபவர்கள் இன எதிரி என கூறியது யார்? இஸ்லாமியர்கள் வேறு நாட்டவர் என்று சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்சும், பா.ஜ.க-வும். அதையேதான் இவரும் எழுதி வைத்திருக்கிறார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள்.

அம்பேத்கரையும், பெரியாரையும் எப்படி ஒப்பிட முடியும்? அண்ணல் அம்பேத்கர் ஆகப்பெரும் உலகின் ஆகச்சிறந்த கல்வியாளர், தத்துவார்த்தவாதி. நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யார் அடிமையும் இல்லை என அண்ணல் கூறினார். இவர் யார்? பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர்.

அம்பேத்கர்

அம்பேத்கர் உலகப் பொதுமைக்கான சித்தாந்தவாதி. ஆனால் இவர் சிந்தித்தது, பேசியது, எழுதியது அனைத்தும் தமிழினத்துக்கு எதிரானது. தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னீர்களே நீங்கள் எந்த மொழியில் பேசினீர்கள், எழுதினீர்கள் ? மொழி தான் அனைத்தையும் தருகிறது. ஆனால், அந்த தமிழ் மொழியை விட்டு ஒழி என்றார் பெரியார்.

அனைத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரத்தை கேட்கிறீர்கள்? அனைத்தையும் வெளியிடுங்கள் நான் ஆதாரம் எடுத்துக் கொடுக்கிறேன். நாங்கள் வெளியிட்டிருக்கும் ஆதாரம் போதவில்லை என்றால், பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு என்னிடம் ஆதாரம் கேளுங்கள் நான் தருகிறேன்.

seeman about periyar

பெரும் செல்வந்தரான வஉசி நாட்டின் விடுதலைக்காக தனது சொத்துக்களை விற்று, சிறையில் செக்கிழுத்து, கடைசி காலத்தில் வறுமையில் தள்ளப்பட்டார். ஆனால் பெரிய செல்வந்தரான பெரியார் சொத்துக்காக வாரிசு தேடி 72 வயதில் 26 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருட்டு கூட்டம்

பெரியார் என் தாத்தா என்றேன். உண்மை தான். படிக்க படிக்கத் தான் தெரிகிறது, தாத்தா என்பது பேத்தா ஆகிவிட்டது. என் இன சாவில் தான் இவர்கள் என் எதிரி எனத் தெரியவருகிறது.

2008 ஆம் ஆண்டு நான் தலைவரை சந்திக்கும் வரை நானும் இந்த திராவிட திருட்டுக் கூட்டத்தில் ஒருவனாகத்தான் இருந்தேன். அவரை சந்தித்தப் பிறகுதான் தமிழன் என்றால் யார், தமிழ் தேசியம் என்றால் என்ன என்று தெரிந்த பிறகு இந்த அரசியலை கட்டமைக்கிறேன்.

திராவிடம் குறித்து படிக்க படிக்கத்தான் திராவிடம் பேசியவர்கள் திருடர்கள் என புரிந்தது. திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பதும் பெரியார் கொள்கைகளை எதிர்ப்பதும்தான் என் கொள்கை" என பேசினார்.