அண்ணாமலைக்கு என்ன ஆச்சு? லண்டன் போய்ட்டு வந்ததிலிருந்து இப்படி ஆயிட்டார்.. திருமா!

Thol. Thirumavalavan Tamil nadu K. Annamalai
By Swetha Dec 27, 2024 08:30 AM GMT
Report

அண்ணாமலை லண்டன் சென்று வந்த பிறகு ஏன் இப்படி ஆனார் தெரியவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நகைப்புக்குரியதாக மாறிவிடக்கூடாது. சாட்டையடி போராட்டம் தேவையற்றது.

அண்ணாமலைக்கு என்ன ஆச்சு? லண்டன் போய்ட்டு வந்ததிலிருந்து இப்படி ஆயிட்டார்.. திருமா! | Thirumavalavan Slams Annamalai Over Abuse Issue

லண்டன் சென்றுவிட்டு வந்த பிறகு அவருக்கு என்ன ஆனாது என்பது தெரியவில்லை. தமிழகத்தில் எதிர்க்கட்சி பாஜக என்பதை காட்டிக்கொள்ள முயல்கிறார் அண்ணாமலை. அரசு மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல. காந்தியடிகள் போல அகிம்சை வழியை கையில் எடுக்கிறாரா எனத் தெரியவில்லை.

காந்தியடிகளே இவ்வாறு செய்ய மாட்டார். அரசை குறைக்கூறி பரபரப்பு அரசியல் செய்கிறேன் என்ற பெயரில், எதை எதையோ அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அதிமுக எதிர்க்கட்சி இல்லை. பாஜகதான் எதிர்க்கட்சி என காட்டிக்கொள்ள அண்ணாமலை முயல்கிறார்.

அதை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு 10 ஆண்டுகள் தேவைப்படும் - திருமாவளவன்

அதை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு 10 ஆண்டுகள் தேவைப்படும் - திருமாவளவன்

அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இச்சம்பவத்தில் உடனடியாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

அண்ணாமலைக்கு என்ன ஆச்சு? லண்டன் போய்ட்டு வந்ததிலிருந்து இப்படி ஆயிட்டார்.. திருமா! | Thirumavalavan Slams Annamalai Over Abuse Issue

புதிய உக்திகளை கையாள வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.