துணை முதல்வர் பதவி..உங்களுக்கு வருத்தம் இல்லையா? கேள்விக்கு திருமாவளவன் பதில்!
துணை முதல்வர் பதவி தொடர்பான கேள்விக்கு திருமாவளவன் ரியாக்ஷன் அளித்துள்ளார்.
துணை முதல்வர்
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று நியமிக்கப்பட்டார். அத்துடன் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றனர்.
அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளதை கூட்டணிக் கட்சித் தலைவராக நான் வரவேற்கிறேன்.
திருமாவளவன்
அவருக்கு எனது வாழ்த்துகள். கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தாரோ, தற்போது ஸ்டாலினுக்கு உதயநிதி உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
அப்போது அவரிடம், உங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்ததே.. தற்போது ஏதாவது வருத்தம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிரித்தபடியே பதில் அளிக்காமல் கடந்து சென்றுவிட்டார் திருமாவளவன்.