உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி - வெளிப்படையாக பதிலளித்த ஸ்டாலின்
அமைச்சரவை மாற்றம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளது குறித்து பல்வேறு அமைச்சர்களும் விரைவில் பதவியேற்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதிக்கு சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
ஸ்டாலின்
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொளத்தூர் எனது சொந்த தொகுதி. நான் எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவேன். என தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விரிவான அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கை வெள்ளை அறிக்கைதான். அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை எப்படி இருந்தது என நன்றாகவே தெரியும்.
அமைச்சரவை மாற்றம்
அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு துணை முதல்வர் குறித்த கேள்விக்கு, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என பதிலளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன் உதயநிதியை துணை முதல்வராக்க கோரிக்கை வலுத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கோரிக்கை வலுத்துள்ளது தானே தவிர இன்னும் பழுக்கவில்லை என பதிலளித்தார்.