பாஜக எதிர்ப்பில் விஜய்க்கு உடன்பாடு இல்லையா? திருமாவளவன் கேள்வி

Vijay Thol. Thirumavalavan Tamil nadu BJP Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 28, 2024 03:30 PM GMT
Report

பாசிச எதிர்ப்பாளர்களை விஜய் நையாண்டி செய்வது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நேற்று நடைபெற்றது.

தவெக தலைவர் விஜய்

இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட சாயத்த பூசி, ‘பாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை என பயம் காட்டுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?” எனக் கேள்வி எழுப்பினர். 

விஜய் கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளர் - யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

விஜய் கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளர் - யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

திருமாவளவன் கேள்வி

இந்நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து விசிக தலைவர் திருமவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்தியாவை பொறுத்தவரையில் பாசிசம் என்றால் பாஜக கோட்பாடு தான். ஆகவே பாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான். 

thirumavalavan

விஜயோ 'அவங்க பாசிசம் என்றால் நீங்க பாயசமா' என்று பாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார். பாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா? 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை முன்னிறுத்துவதாலும் 'பிளவுவாதத்தை எதிர்ப்போம்' என கூறுவதாலும் அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டால், பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏனென்ற கேள்வி எழுகிறது” என கூறினார்.