விவாதத்துக்கு வழி வகுத்த வீடியோ..கூட்டணியில் அது நடக்காது - திருமா விளக்கம்!

Thol. Thirumavalavan Tamil nadu Coimbatore
By Swetha Sep 25, 2024 11:30 AM GMT
Report

கூட்டணியில் எந்த விரிசலும் வராது' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

கூட்டணியில்.. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேட்டியில் ஒன்றில், சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் என்ற பதவிக்கு வரும் போது 40 ஆண்டுகால அரசியலில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆகக்கூடாதா'

விவாதத்துக்கு வழி வகுத்த வீடியோ..கூட்டணியில் அது நடக்காது - திருமா விளக்கம்! | Thirumavalavan Press Meet In Coimbatore

என்று பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியது. ஆதவ் அர்ஜூனா கருத்து முதிர்ச்சியற்றது' என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி யுமான ரவிக்குமார் கூறி இருந்தார்.

தி.மு.க கூட்டணிக்கு பிளவு ?திருமாவின் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார் - ஆ.ராசா எம்பி!

தி.மு.க கூட்டணிக்கு பிளவு ?திருமாவின் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார் - ஆ.ராசா எம்பி!

திருமா..

'ஆதவ் அர்ஜூனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, தி.மு.க வை சேர்ந்த ஆ.ராசா கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து கோவை விமான நிலையத்தில் திருமாவளவனிடம் செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர்.

விவாதத்துக்கு வழி வகுத்த வீடியோ..கூட்டணியில் அது நடக்காது - திருமா விளக்கம்! | Thirumavalavan Press Meet In Coimbatore

அதற்கு பதிலளித்த அவர், ஆதவ் அர்ஜூனா கருத்தால் தி.மு.க., - வி.சி.க., இடையில் எந்த சலசலப்பும் இல்லை; விரிசலும் இல்லை. விரிசல் உருவாகவும் வாய்ப்பில்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற எனது வீடியோ பலத்த விவாதங்களை எழுப்பிவிட்டது.

ஆதவ் அர்ஜூனா பேச்சு குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசினேன். கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி தான் உட்கட்சி விவகாரங்களில் முடிவு எடுப்போம். ஆதவ் அர்ஜூனாவின் கருத்தால் தி.மு.க., உடனான கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. என்று தெரிவித்தார்.