அரசியல் நாடகத்தில் திருமாவளவன் இரட்டை வேடம் - தமிழிசை கடும் விமர்சனம்!
திருமாவளவன் இரட்டை வேடமிடுகிரார் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
திருமாவளவன்
அம்பேத்கர் நினைவு நாளான இன்று (06.12.2024) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்,
அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா பேச்சை சுட்டிக்காட்டி
தமிழிசை
திருமாவளவனை விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, அனைவருக்குமானவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனிவின் மனசாட்சி அங்கே இருக்கிறது என்று அவர் கட்சியில் இருக்கும் துணைப் பொதுச் செயலாளரே கூறுகிறார்!
இன்றைய அரசியல் நாடகத்தில் திருமாவளவனின் இரட்டை வேடம். ஒரு வேடத்தின் மனசாட்சி அங்கே! மேடையில் ஒரு வேடம்! இங்கே மன்னர் ஆட்சி நடத்தும் திமுகவின் அரசாட்சியோடு... ஒரு வேடம்! திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு வேடம்!
திமுக கூட்டணிக்கு ஆதரவாக... நேராக செல்லாதது நேர்மையான முடிவா? அல்லது நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம்.. என்ற முன்னெச்சரிக்கை? முடிவா.. அல்லது எச்சரிக்கை செய்யும் முன்னோட்டமா???? என்று தெரிவித்துள்ளார்.