திருமாவளவனுக்கு அழுத்தம்.. நான் முரண்படும் விஷயம் இதுதான் - ஆதவ் அர்ஜுனா தாக்கு!
திருமாவளவனுக்கு அழுத்தம் இருந்ததாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
அம்பேத்கர் நினைவு நாளான இன்று (06.12.2024) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதாக கூறினார். இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்தும் புகழ்ந்து பேசினார்.
ஆதவ் அர்ஜுனா
இது திமுக-விசிக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி பேட்டியளித்த அவர் பேசியதாவது,
“விஜய் பங்கேற்ற புத்தக விழாவில் பங்கேற்கக்கூடாது என திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது. விழாவில் பங்கேற்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என அமைச்சர் எ.வ.வேலு திருமாவளவனிடம் கூறினார். புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் கூட்டணி உருவாகும் என நினைப்பது முதிர்ச்சியற்றது.
திமுகவின் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது, முதிர்ச்சியற்றது” என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும், நான் அவரிடம் இருந்து எங்கு முரண்படுகிறேன் என்றால், நம்மிடம் உண்மையாக ஒரு விஷயம் இருக்கிறது. இந்த புத்தகத்தை 18 மாதங்களாக கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளோம்.
விஜய் வரும்போதும் நீங்கள் வருவதாக சொல்லிவிட்டீர்கள். அவருடைய அரசியல் என்பது அவருடைய கொள்கை. சமீபத்தில் கூட ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவிடத்திற்கே சென்றார். அது சாரணமான ஒன்றாகத்தானே பார்க்கப்பட்டது. என்று தெரிவித்துள்ளார்.