பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த வானதி சீனிவாசன் - பகிரங்கமாக நிராகரித்த திருமாவளவன்
திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
வானதி சீனிவாசன் அழைப்பு
கர்நாடக தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பாஜக முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.
இந்நிலையில், கோவையில் அங்கன்வாடி மையம் திறப்பு விழாவில் பேசிய வானதி சீனிவாசன், “திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார்.
திருமா மறுப்பு
எந்த பட்டியல் இன மக்கள் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியவில்லை. எதற்காக திருமாவளவன் அங்கு உள்ளார்.திருமா சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த திருமாவளவன், “திமுகவை பலவீனமாக்கும் எந்த செயலையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்யாது. கூட்டணி தொடர்பாக யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என மறுத்துள்ளார்.