கூட்டணிக்காக இதை செய்தால் அசிங்கமாகிவிடும் - திருமாவளவன் விளக்கம்
ஆட்சியில் பங்கு கேட்ட வீடியோ குறித்து திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் அவர் பேசிய வீடியோ இரு முறை பதிவிட்டு நீக்கப்பட்டது.
இந்த வீடியோவில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மனிதனுக்கும் அதிகாரம் என பேசியிருப்பார்.
வீடியோ நீக்கம்
ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து கொண்டு தான் நடத்தும் மது விலக்கு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது சர்ச்சையான நிலையில், இந்த விடியோவை பதிவிட்டது திமுக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளதா என பேசும் அளவுக்கு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள திருமாவளவன், "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற நிலைப்பாடு நீண்டகாலமாக உள்ளது. வீடியோவை அட்மின் பதிவிட்டிருப்பார். ஏன் நீக்கினார்கள் என்று எனக்கு தெரியாது. கூட்டணிக்காக மது விலக்கு மாநாடு நடத்தினால் அதை விட பெரிய அசிங்கம் எனக்கு வேறு எதுவும் இல்லை என கூறியிருக்கிறார்.
கொடி கம்பம் அகற்றம்
இந்த பரபரப்புக்கு இடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்டபோது முதன் முதலாக மதுரை கே.புதுர் பகுதியில், கட்சியின் கொடி கம்பத்தை நட்டு திருமாவளவன் விசிக கொடியை ஏற்றியிருந்தார். இந்த கொடி கம்பத்தை காவல் துறையினர் தற்போது அகற்றி அங்கிருந்து சிறுது தூரம் தள்ளி வைத்துள்ளனர்.
இதற்கு விளக்கமளித்த திருமாவளவன், மதுரை மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார். இது குறித்து மூத்த அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என பேசினார்.