விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழா - திருமாவளவன் புறக்கணிப்பு!

Vijay Thol. Thirumavalavan Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Dec 01, 2024 03:35 AM GMT
Report

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனம் அம்பேத்கர் குறித்த நூலை வெயிடுகிறது.

விசிக

சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைப்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யும்,விசிக தலைவர் தொல் திருமாவளவனும் கலந்து கொள்வதாக இருந்தது.

விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழா

விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பேசுகையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்தால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விசிக.. எனக்கும் முதல்வர் கனவு உண்டு - போட்டுடைத்த திருமா!

தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விசிக.. எனக்கும் முதல்வர் கனவு உண்டு - போட்டுடைத்த திருமா!

 விஜய்

பின்னர் அரசியல் காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டேன் என்று திருமாவளவன் அறிவித்தார். இதனையடுத்து தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்கிறார்.

விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழா

இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் அவர்கள் வரவேற்புரை வழங்குகிறார். வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா நூல் உருவாகஉருவாக்கவுரை ஆற்றுகிறார். இறுதியாக ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன் நன்றியுரை ஆற்றுகிறார்.