ஆம்ஸ்ட்ராங் - ஆருத்ரா - பாஜக!! விசாரணை வேண்டும்..திருமாவளவன் வலியுறுத்தல்
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தது வருமாறு,
திருமா செய்தியாளர்கள் சந்திப்பு
முதல்வரை சந்தித்து மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி திட்டமிட்டவர்கள், நடைமுறைப்படுத்திய கூலி கும்பலையும் கைது செய்ய வலியுறுத்தியுள்ளோம். சட்ட ஒழுங்கை குலைத்து பதற்றத்தை உருவாக்க சில அரசியல் அமைப்புகள் செயல்படுகின்றன
குறிப்பாக பாஜக. ஆகவே, ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் ஒரு அரசியல் செயல்திட்டம் வாய்ப்பிருக்கிறதாக சந்தேகப்படுகிறோம். ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில் பாஜகவை சேர்ந்த ஒருவர் தான் ஊடங்களுக்கு பேட்டி கொடுத்து CBI விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்தார். எடுத்த எடுப்பிலேயே விசாரணை மத்திய அரசின் பிடியில் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் குரலாக, பாஜக மாநில தலைவரின் குரலாக இருந்தது.
ஆருத்ரா
ஆருத்ரா - பாஜக சம்மந்தம் தொடர்பாக விசாரணை இருக்கிறது. ஆருத்ராவில் சமணத்தப்பட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார்கள். இப்பொது ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கொலையும் பேசப்படுகிறது. பாஜக இதில் தானாக வந்து CBI விசாரணை கோருகிறது. இது விசாரணை குறியதாக உள்ளது.
திமுக அரசுக்கு எதிராக பதற்றதை ஏற்படுத்த, சட்ட ஒழுங்கை சீர்கெடுக்கும் வகையில் தான் அவர்களின் நம்பிக்கை உள்ளது. கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, அரசியல் அநாகரீகத்தின் உச்சம். கருத்தியல், அரசியல் விமர்சனம் இருக்கலாம். ஆனால், அவரை கொச்சை படுத்துவது பதற்றத்தை உருவாக்குவது அவர்களின் நோக்கமாக உள்ளது.
அழுத்தம்
சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அரசு காப்பாற்றவேண்டும் என்பதற்க்காக வலியுறுத்தியுள்ளோம். கெடுக்க நினைக்கும் அரசியல் அமைப்பினர்களையும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். நீட் தேர்வு குறித்தும், கிரிமினல் சட்ட தொடர்பான உடனே அனைத்து கட்சி கூட்ட வேண்டும் மனுவும் அளித்துள்ளோம்.
நீட் தேர்வு முறைகேடு நாடாளுமன்றத்திலும் ஒளிந்துள்ளது.
முறைகேடுகள் நடந்துள்ளது. திமுக அரசு நடவடிக்கை எடுக்கணும். வரும் 18-ஆம் தேதி விசாரணை வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கும், நீதிம்னற்றத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.