யாராக இருந்தாலும் கூண்டில் ஏற்றப்படுவார்கள் - அமைச்சர் ரகுபதி உறுதி!!

Bahujan Samaj Party Tamil nadu DMK
By Karthick Jul 10, 2024 05:03 PM GMT
Report

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெறும் சலசலப்புகளை உண்டாக்கி வருகின்றது.

விசாரணை

இது தொடர்பாக CBI விசாரணை வேண்டும் என தமிழகம் வந்த மாயாவதி நேரடி கோரிக்கை வைத்து சென்றார். பழிக்கு பழியாக, போலீஸ் ஸ்டேஷன் சுற்றுவட்டாரத்திலேயே மாநில தலைவர் ஒருவரே கொல்லப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சையே கொடுத்துள்ளது.

Minister Ragupathi

இதில், 8 பேர் சரண்டர் ஆகிவிட்ட நிலையிலும் பலர் விசாரணை முழுவதுமாக வேண்டும் என கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இது குறித்து பேசியுள்ளார்.

யாராக இருந்தாலும்.. 

அவர் பேசும் போது, காவல்துறை இந்த விவகாரத்தில் நியாயமாக செயல்படும், அப்படி தான் பாதிக்கப்பட்டவகளின் குடும்பத்தினர் நம்புகிறார்கள். ஆம்ஸ்ட்ராங்கின் இயக்கத்தை சேர்ந்தவர்களும் அதையே நம்புகிறார்கள்‌. ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுக்க அவசியம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிடையாது.

சென்னை'ல இந்த ரோடு'க்கு ஆம்ஸ்ட்ராங் பெயர் வைங்க - சீமான் வலியுறுத்தல்

சென்னை'ல இந்த ரோடு'க்கு ஆம்ஸ்ட்ராங் பெயர் வைங்க - சீமான் வலியுறுத்தல்

இதற்கு பொறுப்பானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள், அரசு அவ்வாறே செயல்படும். சமூகநீதிக்காக உருவாக்கப்பட்ட திமுக இயக்கத்தில் தனிப்பட்ட எந்த மனிதர்களுக்காகவும் பணிந்து போகும், விட்டுக்கொடுக்கும் அவசியம் கிடையாது.

Minister Ragupathi

எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் குற்றவாளி கூண்டில் ஏற்றுவதற்கு தமிழ்நாட்டின் காவல்துறை என்றைக்குமே தயங்காது. இவ்வாறு அவர் பேசினார்.