சென்னை'ல இந்த ரோடு'க்கு ஆம்ஸ்ட்ராங் பெயர் வைங்க - சீமான் வலியுறுத்தல்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதற்கு தேசிய அரசியலை கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களாக பெறும் சலசலப்புகளை உண்டாக்கியது. அவரது மறைவிற்கு தேசிய கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, கடும் குற்றச்சாட்டுகளையும் வைத்து சென்றார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு வலியுறுத்தல்களை வைத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய ஒரு வலியுறுத்தலை வைத்துள்ளார்.
‘பெரம்பூர் காகித ஆலை (பேப்பர் மில்) சாலைக்கு' அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 9, 2024
ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிமக்களின் அரணாக விளங்கிய அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள், தமது இறுதி மூச்சுவரை… pic.twitter.com/X860eqQOhi
அவர், சென்னை பெரம்பூரில் உள்ள பேப்பர் மில்ஸ் ரோடிற்கு ஆம்ஸ்ட்ராங்கின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்