திருமகன் ஈ.வெ.ரா மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Indian National Congress M K Stalin Tamil nadu Death
By Sumathi Jan 05, 2023 04:02 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா(46) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

எம்எல்ஏ மறைவு

எம்எல்ஏ திருமகனின் மரணம் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.

திருமகன் ஈ.வெ.ரா மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி | Thirumagan E Ve Ra Dies Tribute To Cm Stalin

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று , அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

ஸ்டாலின் அஞ்சலி

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ,மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி , பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ,கணேசமூர்த்தி ,விஜய் வசந்த், செல்லகுமார் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ஏஜி வெங்கடாசலம் , செல்வ பெருந்தகை, ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணி, துணை மேயர் செல்வராஜ் , ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் உடன் இருந்தனர்.