இவர்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றியும் : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
முதலமைச்சர் புயல் நிவாரணம்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ECR, காசிமேடு பகுதிகளில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினேன்.
இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களைக் காத்திட இரவு பகல் பாராமல் முழு அர்ப்பணிப்போடு தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் MLA & MP-க்கள் – உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மேயர்கள்
முதலமைச்சர் ட்வீட்
துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், மின்சார வாரியம் – காவல்துறை – தீயணைப்புத் துறை ஊழியர்கள் – தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு என் பாராட்டுகளும் – நன்றியும்.
பெருமளவில் பாதிப்புகள் இல்லையென்றாலும், ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைந்து சீர்செய்யப்படும்.’ என பதிவிட்டுள்ளார்