அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரம்- எதிர்கட்சிகளுக்கு திருமா கொடுத்த அட்வைஸ்!
அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரம் குற்றச்செயல் பெரும் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் (37) என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர்,’’அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரம் குற்றச்செயல் பெரும் வருத்தத்தையும், வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை என்று கூறினார்.
திருமாவளவன்
தொடர்ந்து பேசியவர் இந்த பிரச்சினையை எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இது அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடு என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரைத் தவிர வேறு யாரும் சம்பந்தப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்குப் பாதுகாப்பு வழங்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். என்று திருமாவளவன் கூறினார்.