கட்சி நலனை விட இதுவே முக்கியமானது - திருமாவளவன் பரபரப்பு பேட்டி

Thol. Thirumavalavan Tamil nadu Election
By Karthick Mar 10, 2024 02:10 AM GMT
Report

மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என உறுதியாக இருந்தோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பேட்டி

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இம்முறையும் சிதம்பரம், விழுப்புரம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறையும் இவ்விரு தொகுதிகளில் தான் விசிக போட்டியிட்டது என்ற நிலையில், இம்முறை 3 இடங்களை பெற்றிட விசிக மும்முரம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

thiruma-press-meet-about-allaincing-with-dmk

இந்நிலையில், கூட்டணி தொகுதி குறித்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும் போது,

 

முதல்வருக்கு வெள்ளத்தைவிட இதுதான் முக்கியம் - திருமாவளவன் ஆவேசம்!

முதல்வருக்கு வெள்ளத்தைவிட இதுதான் முக்கியம் - திருமாவளவன் ஆவேசம்!

I.N.D.I.A கூட்டணி உருவானதில் விசிக கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது என்று குறிப்பிட்டு, 3 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என உறுதியாக இருந்த நிலையில், 2 தொகுதிக்கு உடன்பட்டிருப்பது விசிகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம் என்றார்.

கட்சி நலனை

திமுக - விசிக காட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு விடும் அதனை பயன்படுத்தி கூட்டணியை உடைக்கலாம் என்ற உள்நோக்கம் சிலருக்கு இருந்ததாக குறிப்பிட்ட அவர், கட்சி நலனா, கூட்டணி - நாட்டு நலனா என்ற கேள்வியின்போது, நாட்டு நலன் முக்கியமானது என்று உறுதிபட தெரிவித்தார்.

thiruma-press-meet-about-allaincing-with-dmk

நாட்டிற்காக கூட்டணி நலன் முன் நிபந்தனையாக இருக்கிறது என்றும் அதனாலேயே கட்சி நலனை அடுத்த நிலைக்கு தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது என்று தெரிவித்தார்.