ஆளுநரின் உச்சந்தலையிலேயே கொட்டிய உச்சநீதிமன்றம் - திருமாவளவன் விமர்சனம்!!
நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ரவி - அரசு விவகாரம்
ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளது. ஆளுநர் மத்திய அரசின் NOMINEE மட்டுமே என்பதை குறிப்பிட்டு, ஆளுநர் மசோதா விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் அமர்ந்து பேசவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
திருமா கருத்து
இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரின் போக்கை சுட்டிகாட்டி நீதிமன்றம் கண்டித்து இருக்கின்றது.
உச்ச நீதிமன்றம் கொட்டு வைப்பதற்கு முன்பு ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஏற்கனவே சொல்லி இருந்தோம்.
ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்த நிலையில், தலையில் உச்ச நீதிமன்றம் கொட்டு வைத்திருக்கின்றது. தீர்ப்பை மதிப்பார் என நினைக்கின்றோம். மசோமக்களுக்கு ஒப்புதல் அளிப்பார் என நினைக்கிறேன்.