ஆளுநர் NOMINEE மட்டுமே..அதனை புரிந்துகொள்ளவேண்டும் -உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி !!
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீதிபதி கேள்வி
நிலுவையில் உள்ள பல்வேறு மசோக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என, தமிழ்நாடு அரசு சார்பில் தொடப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
Withheld என குறிப்பிட்டு மசோதாக்கள் திருப்பி அனுப்பிய நிலையில் தற்போது ஜனாபதிக்கு மசோதாவை அனுப்பியது ஏன்..? என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது. மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை அரசுக்கு அனுப்பாமல் ஜனாதிபதிக்கு அனுப்பியது ஏன்.? என்றும் 2-வது முறை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது கட்டாயம் என அரசியல் சாசனம் கூறுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கவோ அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டி, குடியரசு தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் ஆளுநர் முதலிலேயே செய்திருக்க வேண்டும் என்று அவர் வினவியுள்ளார்.
NOMINEE மட்டுமே
குடியரசு தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவருக்கென தனி அதிகாரம் உண்டு என்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஆளுநர் மத்திய அரசின் NOMINEE மட்டுமே என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநர் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான பிரச்னைகளை முதலமைச்சருடன் அமர்ந்து பேசி ஆளுநர் தீர்க்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, அனுமதியை நிறுத்துவது அல்லது மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒதுக்குவது ஆகிய மூன்று வழிகள் உள்ளன. ஒருவேளை ஆளுநர் மசோதாவை நிறுத்திவைத்துவிட்டால், அதனை குடியரசுத் தலைவருக்கு ஒதுக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர்.