என்ன நினைச்சீங்க விஜய பத்தி...பயங்கர short temper அவரு!! பாப்போம்'னு இப்படி இருக்காரு - திருச்சி சூர்யா!!
நடிகர் விஜய் சரியான முன்கோபக்காரர் என பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
Short temper
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, களம் எப்படி இருக்கு'னு பார்க்கணும், மாநாடு போடணும், நீங்க crowd காட்டணும், இன்னொன்னு இவரு எப்படி மக்கள்'ட பழகுறார்'னு பாக்கணும்.
creamy லேயர்'லேயே பழகியிருக்காரு. short temper வேற, எங்கயாவது selfie எடுக்கும் போது, கேமரா'வ தட்டி விட்டீங்க'னாலே உங்க..சரியான short temper. என்ன நெனச்சேங்க நீங்க அவர? அவரு சரியான short temper. நீங்க மக்கள்'ட இறங்கி எளிமையா பழகி..அவரு அந்த அளவுக்கு இருப்பாரா'னு தெரியல?
பார்ப்போம்'னு....
அப்போது நெறியாளர் விஜய் ரசிகர்கள் கோபப்படப்போகிறார்கள் என்று கூற, அதற்கு ஏங்க அவுங்க'ளுக்கு வேற பொழப்பு கிடையாது, அவுங்க கோவப்படுட்டு தான் இருப்பாங்க....அதுக்காக உண்மையில்ல'னுலாம் சொல்ல முடியாது.
கட்சியின் முதல் நிகழ்வு - ஜூன் 28'இல் களமிறங்கும் தலைவர் விஜய் - அதிரடியாக அறிவித்த பொதுச்செயலாளர் ஆனந்த்!!
சினிமா'ல இருக்க எல்லாருக்கும் தெரியும் அவரு short temper.தக்குப்புக்கு'னு கோவப்பாடுவாரு. அவரோட comfort zone'அ யாருக்காகவும் இழக்க மாட்டாரு.
அப்போது மீண்டும் நெறியாளர் வீடியோக்களில் அவர் பொறுமையாக தானே இருக்கிறார் என கேட்க, அதன் சொல்றேன், பாப்பாங்க'னு பொறுமையா இருக்காரு என்றார் திருச்சி சூர்யா.