திருச்செந்தூர் கடலில் மிதந்து வந்த பொக்கிஷம்.. வியப்பில் பக்தர்கள் - அடுத்து நடந்த ஷாக்!
திருச்செந்தூர் கடலில் பொக்கிஷம் மிதந்து வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலில்..
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. கோவிலின் அருகே கடற்கரை அமைந்துள்ளதால் பக்தர்கள் கடலில் புனித நீர் ஆடிவிட்டே, சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
பௌர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். திருச்செந்தூர் கடல் பகுதியில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் உள்வாங்குவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புயல் மற்றும் கனமழை காரணமாக மாலையில் திடீரென திருச்செந்தூர் கடல் உள்வாங்கி காணப்பட்டது. அந்த சமயத்தில், திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
அப்போது கடல் உள்வாங்கிய பகுதியில் நீராடியபோது ஒரு 6 அடி உயரம் கொண்ட பெரிய கல்வெட்டு தென்பட்டுள்ளது.இதை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடல் பாறை மேல் கிடந்த கல்வெட்டை எடுக்க தொடங்கினர். அந்த கல்வெட்டில் மொத்தம் 15 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
பொக்கிஷம்
அதை தொடர்ந்து பேராசிரியர்கள் கடற்கரை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்து அடுத்த 100 அடி தூரத்தில் மற்றொரு 6 அடி உயரம் கொண்ட கருங்கல் தூண் கிடந்தது. அந்த கல்வெட்டில் 17 வரிகள் பொறிக்கப்பட்டு இருந்தது.
இந்த இரு கல்வெட்டுகளும் சுமார் 50 முதல் 100 ஆண்டுகளுக்கு உள்பட்டது எனவும், இவை நாழிக்கிணறு அருகே இருக்கும் பிற நல்ல தண்ணீர் கிடைக்கும் தீர்த்த கிணறுகள் இருந்ததைக் குறிக்க நடப்பட்டவையாக இருக்கும் எனவும்,
இம்மாதிரியான நல்ல தண்ணீர் கிணறு இந்தப் பகுதியில் நிறைய உள்ளன எனவும், அவற்றைச் சீரமைத்தால் கடலில் நீராடிய பொதுமக்கள் நல்ல தண்ணீரில் குளிக்க எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.