இனி யாரையும் தாக்கமாட்டேன் - கியூட்டாக தலையாட்டிய தெய்வானை யானை!
தெய்வானை யானை தலையை ஆட்டிய வீடியோ காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தெய்வானை யானை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற 26 வயது பராமரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த யானை தாக்கியதில் யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதனால் வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தது. தொடர்ந்து ஓரிரு வாரங்களுக்கு பின் யானை சாதாரண நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
க்யூட் ரியாக்ஷன்
புதிய யானை பாகன் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வன கால்நடை மருத்துவர் மனோகரன், ஆறுமுகநேரி கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார், வன கால்நடை ஆய்வாளர் அர்னால்ட், வனவர் ரகு ஆகியோர் யானையை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர்.
அப்போது “இனி யாரையும் தாக்குவாயா?” என்று வேடிக்கையாக பாகன் கேட்டதற்கு, “மாட்டேன்” என்பது போல் தலையை ஆட்டியது. இதனை பார்த்த அதிகாரிகள் யானை சகஜ நிலையில் தான் உள்ளது.
எனவே யானையை எப்போதும் போல் தினமும் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம் என பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி, முதற்கட்டமாக பக்தர்கள் குறைவாக உள்ள சமயங்களில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லவுள்ளனர்.