உங்க படுக்கை அறையில் இந்த பொருள்கள் இருக்கா?குடும்ப நிம்மதியை சீர்குலைக்கும் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
படுக்கை அறையில் தூங்கும் போது எந்தெந்த பொருள்களையெல்லாம் அருகில் வைத்து தூங்கக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
படுக்கை அறை
நம் அனைவருக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது உறக்கம் தான். ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உறங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் படுக்கை அறையில் தூங்கும் போது சில பொருள்கள் மூலம் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். அது என்னென்ன பொருள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மோபைல் , லேப்டாப், டேப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைத் தூங்கும் அறையில் வைத்தால், தூக்கம் கெடும் எனச் சொல்லப்படுகிறது.
துவைக்காத அழுக்கு துணிகளைத் தூங்கும் அறையில் வைக்கக் கூடாது.இதனால் கெட்ட கனவுகள் வரும்.காலணிகளைத் தூங்கும் அறையில் வைக்கக் கூடாது. இப்படி வைப்பதால் எதிர்மறையான ஆற்றல்களை ஈர்க்கும்.தூங்கும் அறையில் மருந்து மாத்திரைகளை வைக்கக் கூடாது.
சாஸ்திர டிப்ஸ்
இது உடல் ரீதியான பிரச்சினைகள் வந்து எப்போதும் மருந்து மாத்திரை சாப்பிடும் நிலை ஏற்படும். மருந்துகளை வடக்கு அல்லது வட கிழக்கு திசையில் வைத்தால் உடல்நிலை சீக்கிரமாகத் தேறிவிடும் எனச் சொல்லப்படுகிறது.
உறங்கும் போது படுக்கையின் அருகில் தண்ணீர் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் திங்கள் கிரகத்தில் தாக்கம் ஏற்படும். இதனால் மனநிலை மாற்றம், ஹார்மோன் சமநிலையின்மை, தூக்கமின்மை ஏற்படும் என சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.