இந்த பொருட்களையெல்லாம் தவறி கூட வீட்டில் வைக்காதீங்க - காரணம் இதுதான்!
இந்த பொருட்களையெல்லாம் தவறி கூட வீட்டில் வைக்காதீங்க - காரணம் இதுதான்! பண கஷ்டம் வராமல், நேர்மறை எண்ணங்களை கொடுப்பதற்கு எந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
உடைந்த கண்ணாடி:
நம் வீட்டில் உடைந்த கண்ணாடி வைத்திருக்க கூடாது. இவை வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும். வருமானத்தில் தடையும், சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கும்.
காய்ந்த செடிகள்:
நீங்கள் ஆசையாக வாங்கி வைக்கும் செடி துளிர்விடாமல் காய்ந்து போய் விட்டால் அதனை அப்படியே வைத்திருக்காமல் அப்புறப்படுத்திவிடுவது நல்லது. இதனால் நிறைய தொழில் பிரச்சினைகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.
ஓடாத கடிகாரம்:
ஓடாத கடிகாரத்தை வீட்டில் அழகு பொருளாக மாற்றி வைக்க கூடாது. இதனால் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
போர் காட்சிகள்:
இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாசத்தில் இடம்பெற்ற போர் காட்சிகளை வைக்க கூடாது. அது குடும்ப அமைதியை சீர்குலைத்து விடும்.
எதிர்மறை காட்சிகள்:
வீட்டில் எதிர்மறை காட்சிகளை படமாகவோ, சிலையாகவோ வைக்க கூடாது. உதாரணமாக, கனி காய்க்காத மரம், மூழ்கும் கப்பல், வேட்டையாடும் காட்சி, கூர்மையான வேள், வாள், விலங்கோ மனிதர்களோ அழுவதை போன்ற படங்கள். இது வீட்டிற்கு ஒருபோதும் நேர்மறை சிந்தனைகளை தராது.