இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட 5 விஷயங்கள் - கேட்டால் ஆடிப்போயிருவீங்க!
வடகொரியாவில் தடை செய்யப்பட்ட விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
தடை செய்யப்பட்ட விஷயங்கள்
வடகொரியாவில் கிம் ஜாங் உன்னின் தலைமையின் கீழ், சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. தொடர்ந்து, பல ஒடுக்குமுறைகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இங்கு தடை செய்யப்பட்ட ஐந்து விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
டெனிம் ஜீன்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது. பிரபலமான உடைகளான கிழிந்த ஜீன்ஸ் போன்றவை அணியக்கூடாது என குடிமக்களை அரசாங்கம் எச்சரித்துள்ளது. ஜீன்ஸிற்குப் பதிலாக, வட கொரியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிவார்கள் என்று கூறப்படுகிறது.
தலைமுடிக்கு கலர் அடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கருப்பு அல்லது அடர் பழுப்பு போன்ற இயற்கையான முடி நிறங்களையே கடைப்பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கண் இமை புருவங்களை பளிச்சென்று வண்ணம் பூசுவது, சிவப்பு உதட்டுச்சாயம் மற்றும் மேற்கத்திய அழகைக் குறிக்கும் பிற ஆடம்பரமான அழகுப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
பிராண்டட் ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிவது முக்கியமாக தடை செய்யப்பட்டுள்ளது. செல்வத்தை வெளிப்படுத்தவோ அல்லது வெளிநாட்டு ஆடம்பரத்துடன் தொடர்புடைய பொருட்களை உடுத்தவோ அனுமதிக்கப்படுவதில்லை.
ஹை ஹீல்ஸ் அணிய தடை. தற்கு பதிலாக, அவர்கள் நாட்டின் எளிய அழகியலுடன் இணைந்த நடைமுறை காலணிகளையே அணிவார்கள் என்று கூறப்படுகிறது.