குழந்தை பெற்றெடுக்கும் மாணவியருக்கு ரூ.84,000 - அரசு அறிவிப்பு!

Vladimir Putin Pregnancy Russia
By Sumathi Jan 10, 2025 09:18 AM GMT
Report

குழந்தையை பெற்றெடுக்கும் மாணவியருக்கு 84,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 பிறப்பு விகிதம்

சீனா, ஜப்பான், தென்கொரிய நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குறிப்பாக, உக்ரைனுடனான போர் காரணமாக, இந்த நிலை மோசமடைந்துள்ளது.

குழந்தை பெற்றெடுக்கும் மாணவியருக்கு ரூ.84,000 - அரசு அறிவிப்பு! | Russia Offer Rs 84000 To Baby Birth Students

குறைவான பிறப்பு விகிதம், முதியவர்களின் இறப்பு மற்றும் குடியேற்றமும் காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில், 5,99,600 குழந்தைகள் மட்டுமே இங்கு பிறந்துள்ளன.

ஒரு நைட்டுக்கு மட்டும் இந்த நாட்டை வாடகைக்கு வாங்கலாம் - எந்த நாடு தெரியுமா?

ஒரு நைட்டுக்கு மட்டும் இந்த நாட்டை வாடகைக்கு வாங்கலாம் - எந்த நாடு தெரியுமா?

அரசு முடிவு

எனவே, ஊக்கத்தொகை, வீட்டு வசதி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்ய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு, இந்திய மதிப்பில் 84,000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

russia

இந்த திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் உள்ளூர் பல்கலை அல்லது கல்லுாரியில் முழுநேர மாணவியராகவும், கரேலியா மாகாணத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில மாகாணங்களில், இந்த ஆண்டு முதல் முதன்முறையாக தாய்மை அடைவோருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும்,

இரண்டாவது குழந்தை பெறுவோருக்கு 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்து பிறக்கும் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.