என் மனைவி கூப்பிட்டா நீங்க போவீங்களா? திலகவதி ஐபிஎஸ் மகன் பரபர ஆடியோ!
காவல் துறை ஏடிஎஸ்பியிடம் திலகவதி ஐபிஎஸ்ஸின் மகன் பிரபு திலக் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
திலகவதி ஐபிஎஸ்
தமிழக காவல் துறையின் முன்னாள் டிஜிபியாக இருந்தவர் திலகவதி ஐபிஎஸ். இவரது மகன் டாக்டர் பிரபு திலக். அரியலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி.
இந்நிலையில், ஸ்ருதியை அழைத்துக் கொண்டு நாகை ஏடிஎஸ்பி சங்கர் என்பவர் பப்புக்கு சென்று அங்கு இருவரும் குடித்ததை பிரபு அறிந்துள்ளார். தொடர்ந்து, சங்கரை தொடர்பு கொண்டு பிரபு ஆவேசமான ஆடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.
பரபரப்பு ஆடியோ
அதில், சங்கர் உங்கள் மனைவிதான் அழைத்தார் என்கிறார். அதற்கு பிரபு, என் மனைவியே அழைத்தாலும் நீங்கள் போய்விடுவதா, என்னிடமோ என் அம்மாவிடமோ சொல்லியிருக்கலாம். இல்லாவிட்டால் என் மனைவியிடமே இது தப்பும்மா என சொல்லியிருக்கலாமே என்கிறார்.
அதற்கு சங்கர் நாங்கள் போனோம், குடித்தோம், ஆனால் எந்த தவறும் செய்யவில்லை என்கிறார். அதற்கு பிரபு, நட்பு ரீதியில் சென்றிருந்தால் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டிருக்க வேண்டும். எதற்காக பப்புக்கு அழைத்து சென்றீர், நீங்கள் இருவரும் மட்டும் எனக்கு தெரியாமல் இப்படி போகலாமா, உங்கள் மனைவியை நான் அழைத்துக் கொண்டு சென்றால் நீங்கள் சும்மா இருப்பீர்களா.
இந்த பிரச்சினையை நான் விட மாட்டேன், டிஜிபிக்கு கொண்டு செல்வேன் என்கிறார். அதற்கு சங்கரோ நான் முதல் முறையாக இப்போதுதான் சென்றேன். இதுவரை செல்லவில்லை என்கிறார். அதற்கு பிரபு, காக்கிச் சட்டையே உன்னால்தான் அழகாக இருக்கு என என் மனைவி உங்களுக்கு வாட்ஸ் ஆப் ஆடியோ அனுப்பியிருக்கிறார்.
நீங்களும் கடலூரில் வைத்து அவரை பார்க்க வருமாறு அழைக்கிறீர்கள். இதையெல்லாம் செய்துவிட்டு என் மனைவி மீது ஏன் கை வைத்தீர்கள். இது தவறானது இல்லையா என்கிறார். அதற்கு சங்கர் குடி போதையில் இருந்ததால் தெரியாமல் வைத்திருப்பேன், மற்றபடி எந்த தவறும் இல்லை என்கிறார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.