இப்படி செய்வாருனு எதிர்பார்க்கல - விக்கி குறித்து ஆதங்கம் தெரிவித்த திலகவதி ஐபிஎஸ்
சமீபத்தில் ஆடம்பரமாக நடைப்பெற்ற நயன்தாரா - விக்கி திருமணம் குறித்து திலகவதி ஐபிஎஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நயன் - விக்கி திருமணம்
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த மாதம் 9-ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசிஆரில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
அதோடு ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா - ஜோதிகா, அட்லீ, அனிரூத் என கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது.
திலகவதி ஐபிஎஸ்
விருந்தினர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது திருமணத்தை எளிமையாக நடத்தியிருக்கலாம் என அண்மையில் திலகவதி ஐபிஎஸ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பேசியுள்ள அவர்,”நயன்தாராவுடைய கணவர் விக்னேஷ் சிவன் எங்கள் பிள்ளை போன்றவர். அவரது அம்மா காவல்துறையில் இருப்பவர். காவல்துறையில் இருக்கும் மற்ற பெண்களின் பிள்ளைகளை நாங்கள் எங்கள் பிள்ளைகள் போலத்தான் கருதுவோம்.
அவர் வசனம், கதை, கவிதை எல்லாமே நல்லா எழுதறாரு. நல்லா வளர்ந்துட்டு வர்றாரு. பார்த்துட்டுதான் இருக்கோம். திருமணத்தை எளிமையாக நடத்தியிருக்கலாம். இப்படி ஆடம்பரமாக நடத்துவாரு என்று எதிர்பார்க்கலை” எனக் கூறியுள்ளார்.