Monday, Apr 28, 2025

வீட்டில் உடம்பு சரியில்லை.. 1 மாதத்தில் தந்து விடுகிறேன் - கடிதம் எழுதிய கொள்ளையன்!

Tamil nadu Thoothukudi Crime
By Jiyath 10 months ago
Report

திருடிய நகை மற்றும் பணத்தை 1 மாதத்தில் திருப்பி தருவதாக கொள்ளையன் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

கொள்ளை சம்பவம் 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் சித்திரை செல்வின். இவர் தனது மனைவியுடன் கடந்த 17-ம் தேதி சென்னை சென்றுவிட்டார். இதனால் இவரது வீட்டை அந்த பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் பராமரித்து வந்தார்.

வீட்டில் உடம்பு சரியில்லை.. 1 மாதத்தில் தந்து விடுகிறேன் - கடிதம் எழுதிய கொள்ளையன்! | Thief Wrote Letter Return Stolen Money And Jewells

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி வழக்கம்போல செல்வி வீட்டில் பராமரிப்பு பணி செய்ய வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்திரை செல்வின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.60,000 பணம், 1½ பவுன் தங்க கம்மல் மற்றும் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு ஆகியவை கொள்ளை போயிருந்தது.

ரூ.10,000 பரிசு.. அரசு பேருந்து பயணிகளுக்கு ஜாக்பாட் - தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

ரூ.10,000 பரிசு.. அரசு பேருந்து பயணிகளுக்கு ஜாக்பாட் - தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

சிக்கிய கடிதம் 

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் சித்திரை செல்வின் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கொள்ளையன் எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

வீட்டில் உடம்பு சரியில்லை.. 1 மாதத்தில் தந்து விடுகிறேன் - கடிதம் எழுதிய கொள்ளையன்! | Thief Wrote Letter Return Stolen Money And Jewells

அதில் "என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் 1 மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால் தான்" என்று எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.