ஜிம்மில் திருடிய கொள்ளையன்...உரிமையாளர் கொடுத்த நூதன தண்டனையை பாருங்க!
ஜிம்மில் திருடன் தண்டனையை அனுபவிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஜிம்மில் திருடன்
கொள்ளையர்கள் பொதுவாக திருட வளந்த இடத்தில் சிக்கினால் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்த பிறகு உடனே போலீசாரிடம் ஒப்படைப்பது தான் வழக்கம்.ஆனால் இங்கு ஒரு நபர் ஜிம்மில் திருட சென்று கையும் களவுமாக சிக்கிய பிறகு உரிமையாளர் கொடுத்த நூதன தண்டனையை அனுபவிக்கும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
அதாவது, மத்திய பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் ஓர் நவீன உடற்பயிற்சி கூடம் இயங்கி வருகிறது. இந்த ஜிம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. எனவே இந்த ஜிம்மின் உரிமையாளர் வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் கண்காணித்துள்ளார். இந்த நிலையில், இரவு ஜிம்மிற்குள் திருடுவதற்காக இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார்.
நூதன தண்டனை
அப்போது ஷட்டரின் அருகே திருடன் செய்வதறியாமல் சுற்றித்திரிவதை வீட்டில் இருந்த ஜிம் உரிமையாளர் செல்போனில் கவனித்திருக்கிறார். இதன் பிறகு அவர் உடனே ஜிம்மிற்கு சென்றார். அங்கு இருந்த திருடனை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அதற்கு முன்பு, அந்த ஜிம் உரிமையாளர் திருடனுக்கு நூதன தண்டனை வழங்க முடிவு செய்தார். அதன்படி அந்த இளைஞரை ஜிம்மில் உள்ள டிரெட்மில்லில் ஓட வைத்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.