துப்பாக்கியுடன் திருட வந்த திருடர்கள்; கையால் அடித்தே ஓட விட்ட சிங்க பெண்கள் - viral video!
ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்களை வெறும் கையால் இரு பெண்கள் அடித்து விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
திருடர்கள்
தெலுங்கானா மாநிலம் ரசூல்புரா அருகே உள்ள பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிப்பதற்காக நாட்டுத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு திருடர்கள் புகுந்தனர்.
அப்போது, வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் கொள்ளையர்களை பார்த்ததும் அவர்களை பிடிக்க முயன்றனர். ஹெல்மெட் அணிந்திருந்த அந்த கொள்ளையன் தன் கையில் துப்பாக்கியை காட்டியதும் இருவரும் பயந்துவிட்டனர் என்று எண்ணினார்.
சிங்க பெண்கள்
ஆனால், சற்றும் தயங்காமல் தாய், மகள் சேர்ந்துகொண்டு தாக்குதல் தொடுக்க, அவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என வீட்டிலிருந்து வெளியேற முயற்சித்தான்.
தொடர்ந்து கொள்ளையர்கள் மீது பாய்ந்து தாக்கியதோடு, ஹெல்மெட்டை அகற்றி அவனது அடையாளத்தையும் அறிந்துகொண்டனர். தாய் மற்றும் மகளிடம் சரமாரியாக அடிவாங்கிய கொள்ளையர்கள் கேட்டை திறந்துகொண்டு தெறித்து ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் இருவரும் சண்டையிடும் சிசிடிவி காட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.