இசைநிகழ்ச்சியில் நடந்த கோரச்சம்பவம் - 60 பேரின் உயிரை பறித்த தீவிரவாத கும்பல்! என்ன பின்னணி?

ISIS Terrorist Death Russia
By Swetha Mar 23, 2024 07:03 AM GMT
Report

மாஸ்க்கோவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோரச்சம்பவம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 'பிக்னிக்' எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். குரோக்ஸ் சிட்டி ஹால் கச்சேரி அரங்கிற்குள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இசைநிகழ்ச்சியில் நடந்த கோரச்சம்பவம் - 60 பேரின் உயிரை பறித்த தீவிரவாத கும்பல்! என்ன பின்னணி? | Terrorist Attack On Concert Hall In Moscow

அப்போது, அடையாளம் தெரியாத ஆயுதங்களை ஏந்திய மர்ம கும்பல் ஒன்று உள்ளே நுழைந்து அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 145 பேர் படுகாயமடைந்தனர்.

ஜிம்மில் நிர்வாணமாக சேர்ந்து உடற்பயிச்சி செய்த ஜோடி - என்ன காரணம்?

ஜிம்மில் நிர்வாணமாக சேர்ந்து உடற்பயிச்சி செய்த ஜோடி - என்ன காரணம்?

என்ன பின்னணி?

காயமடைந்தவர்களில் 5 குழந்தைகள் உட்பட 115 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  மேலும், 60 பேர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர் என ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இசைநிகழ்ச்சியில் நடந்த கோரச்சம்பவம் - 60 பேரின் உயிரை பறித்த தீவிரவாத கும்பல்! என்ன பின்னணி? | Terrorist Attack On Concert Hall In Moscow

இதை தொடர்ந்து இந்த பயங்கரவாத தாக்குதலக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு முழு பொறுப்பேற்று கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் நிகழ்ந்த கோரசம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்ததையடுத்து, பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.