கார் திருட்டு - மனம்கேட்காமல் மன்னிப்பு கடிதத்துடன் நடுரோட்டில் நிறுத்திச்சென்ற திருடன்!

Rajasthan Viral Photos Crime
By Sumathi Oct 16, 2024 01:30 PM GMT
Report

காரை திருடி விட்டு மனம் கேட்காமல், அதனை திருடன் விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கார் திருட்டு

டெல்லி, பாலாம் காலனியைச் சேர்ந்தவர் வினய்குமார். இவர் தனது ஸ்கார்பியோ கார் திருடுபோய்விட்டது என்று அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்துள்ளார்.

apology notes

அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து அதனை போலீஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் பிகானரில் ஸ்கார்பியோ கார் ஒன்று, நம்பர் பிளைட் இல்லாமல் ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதில், காரின் பின்பக்க கண்ணாடியில் இரண்டு காகித குறிப்புகள் வைக்கப்பட்டிருந்தது.. ஒன்றில், ”இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியிலிருந்து திருடப்பட்டது. மன்னிக்கவும்.” என்றும்,

திருடன் செய்த செயல்

இரண்டாவதில், வண்டி எண்ணையும் எழுதிய திருடன் “ DL 9 CA Z2937” “ I LOVE MY INDIA" என்றும் தனது கையால் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். மூன்றாவதாக, வைக்கப்பட்டிருந்த காகித குறிப்பில், “ இந்த கார் டெல்லியில் திருடப்பட்டது. உடனே போலீஸுக்குச் சொல்லுங்கள்.. அவசரம்.” என்று எழுதப்பட்டுள்ளது.

கவிஞரின் வீட்டில் திருட்டு - உண்மை தெரிந்ததும் மனமுடைந்து திருடன் செய்த செயல்!

கவிஞரின் வீட்டில் திருட்டு - உண்மை தெரிந்ததும் மனமுடைந்து திருடன் செய்த செயல்!

தொடர்ந்து போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில், கார் மீட்கப்பட்டது. மேலும், காரை பயன்படுத்தி ஏதேனும் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.