அப்பனே நீதான் காப்பாத்தனும்... செருப்பு கூட போடாம கோயில் உண்டியலை அலேக்கா தூக்கிச்சென்ற திருடன்!
கோவிலின் உண்டியலை திருட, சாமி கும்பிட்ட திருடனின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
திருடன்
மத்தியப் பிரதேசம், ஜபல்பூரில் ஹனுமான் கோவில் ஒன்று உள்ளது. அதில், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில், வெள்ளை நிற காரில் வந்திறங்கும் அந்த திருடன், கடவுளிடம் மனமுருக வேண்டிக் கொள்கிறார்.

அதன்பின், அங்கிருந்த உண்டியலைத் திருடிச் செல்கிறார். இந்தச் சம்பவம் தீபாவளிக்கு முதல் நாள் நள்ளிரவு 2 மணி அளவில் நடந்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பக்தர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகள்
கைகளில் வாட்ச் எல்லாம் அணிந்திருந்த திருடன் குறிப்பாக அவன் தனது செருப்பைக் கூட கோவிலுக்கு வெளியே கழட்டி வைத்து விட்டான் என்றும் போலீசார் தெரிவித்தனர். இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவை வைத்து அந்த திருடனை போலீசார் கைது செய்தனர். தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.