கலகலப்பு திரைப்பட பாணியில் திருட போன இடத்தில் ஜன்னலில் சிக்கிய திருடன்!

Thief Trapped AndhraPradesh Window ஜன்னல் திருடன் ஆந்திரா
By Thahir Apr 06, 2022 07:55 AM GMT
Report

ஆந்திராவில் கொள்ளையடிக்க சென்ற இடத்தில் கலகலப்பு திரைப்பட பாணியில் கொள்ளையன் ஜன்னலில் சிக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் திருவிழா அண்மையில் நடந்து முடிந்தது. இந்த திருவிழாவிற்கு வந்த ஏராளமான பக்தர்கள் தங்கம்,வெள்ளி,பணம் என ஆகியவை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இதையறிந்த கொள்ளையன் நேற்று இரவு கோவிலின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளான். கோவில் கருவறையில் இருந்த அம்மனின் தங்கம்,வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு ஜன்னல் வழியே வெளியே வர முயன்றுள்ளார்.

ஆனால் அப்போது அந்த கொள்ளையனால் வெளியே வர முடியவில்லை இதனால் அந்த இடத்திலேயே கொள்ளையன் அசந்து துாங்கியுள்ளான்.

இன்று காலை பக்தர்கள் வழக்கம் போல கோவிலுக்கு சென்ற போது ஜன்னல் வழியே திருடன் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ஜன்னலில் சிக்கி இருந்த திருடனை அங்கு கூடியிருந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையனை மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர். கொள்ளையன் ஜன்னல் வழியில் சிக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.