திருட வந்த இடத்தில்..வீட்டு வேலைகளை செய்து சென்ற நபர் - அதற்கு இப்படி ஒரு காரணமா?
திருடிய வீட்டில் நபர் ஒருவர் வீட்டு வேலைகளை செய்து சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருட வந்த நபர்
லண்டனை சேர்ந்த டாமியன் வோஜ்னிலோவிச் என்ற 36 வயது நபர் ஒருவர், வேல்ஸ் நகரில் வேலைக்கு சென்றுவிட்ட பெண்ணின் வீட்டை உடைத்து திருடச்சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த எந்த பணத்தையும்,
பொருளையும் திருடாமல் வீட்டிலிலுள்ள குப்பைகளை அகற்றி குப்பைத்தொட்டியை சுத்தமாக்கிவிட்டு, வீட்டை பெருக்கியதோடு இல்லாமல், மாப் போட்டு துடைத்து சுத்தம் செய்துள்ளார்.
அதன்பிறகு வீட்டிலுள்ள பறவைகளுக்கு தீணியை வழங்கியது மட்டுமில்லாமல், காய்கறிகளை முறையாக அடுக்கி வைத்துவிட்டு, ருசியான உணவையும் சமைத்துள்ளார். பின்னர் அவ்வீட்டிலேயே குளித்த அவர்,
வீட்டு வேலை
தன்னுடைய துணிகளை துவைத்து காயவைத்துவிட்டு, அது காய்வதற்குள் உணவருந்திவிட்டு வைன் அருந்தி பாட்டிலையும் காலிசெய்து அலமாறியில் அடுக்கிவைத்துள்ளார். இதை தொடர்ந்து,
காய்ந்த தன்துணிகளை அணிந்துகொண்டு வீட்டிலிருந்து புறப்பட்ட திருடன், “கவலைப்படாதே, சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக இரு” என்ற குறிப்பையும் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார்.
வேலை முடிந்து வீடு திரும்பிய அந்த பெண், வீட்டின் கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண், என் சொந்த வீட்டில் இருக்கவே எனக்கு பயமாக இருந்தது. என தெரிவித்துள்ளார்.