காதலிக்கு ரூ.3 கோடியில் பங்களா கட்டிய திருடன் - கதறும் மனைவியும், குழந்தையும்!
திருடன் தனது காதலிக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு பங்களா கட்டி கொடுத்துள்ளார்.
நகைகள் திருட்டு
மஹாராஷ்டிரா, சோலாப்பூரை சேர்ந்தவர் பஞ்சாக் ஷரி சாமி(37). இவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி பொருட்கள்,
தங்கத்தை உருக்க பயன்படுத்தப்படும் கம்பி, ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். தாயுடன் வசித்து வருகின்றனர்.
காதலிக்கு பங்களா
அந்த வீட்டின் மீதான கடனை செலுத்தாததால், வீடு தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையில் பஞ்சாக் ஷரி 2003ல் திருட ஆரம்பித்து 2009ல் தொழில் முறை திருடனாக மாறியுள்ளார். பல்வேறு வீடுகளில் திருடிய நகை, வெள்ளி பொருட்களை விற்று கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நடிகைக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. நடிகைக்காக 3 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா கட்டி கொடுத்துள்ளார். மேலும் அவர் பிறந்தநாளுக்கு 22 லட்சம் ரூபாய்க்கு பரிசும் வாங்கி கொடுத்துள்ளார்.
இவர் மீது 180 வழக்குகள் உள்ளன. திருடப்படும் தங்க நகைகளை உருக்கி விற்பனை செய்துள்ளார். தற்போது போலீஸார் அவரது காதலியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.