விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்? இந்த ரூல்ஸையும் தெரிஞ்சுக்கோங்க..
விமானங்களில் மது எடுத்துச் செல்வது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.
மதுபானம்
இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்துக்கான ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சில வழிகாட்டுதல்களை அமைத்துள்ளது.
அதன்படி, உள்நாட்டு விமானங்களில் பயணிகள் குறைந்த அளவு மதுவை மட்டுமே எடுத்துச் செல்ல விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆல்கஹால் உள்ளடக்கம் 70% ஐ விட அதிகமாக இல்லை எனில், பயணிகள் 5 லிட்டர் வரை மதுபானங்களை எடுத்துச் செல்லலாம். விமானங்களில் பயணிகள் தங்கள் சொந்த மதுவை உட்கொள்ள முடியாது. மதுபானங்களை எடுத்துச் செல்ல மறுக்கும் உரிமை விமான நிறுவனத்திற்கு உள்ளது.
விமான விதிமுறை
ஏர் இந்தியா கேபின் மதுவை முற்றிலுமாகத் தடைசெய்துள்ளது. ஸ்பைஸ் ஜெட், விஸ்தாரா போன்ற விமான நிறுவனங்கள், பயணிகள் பரிசோதனைக்குப் பின் சரியான அளவில் இருந்தால் அனுமதிக்கப்படுகின்றன.
எனவே, பயணிகள் தங்கள் விமானத்திற்கு முன் சமீபத்திய DGCA விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.