ஒன்னும் இல்லாத கடைக்கு எதுக்கு கதவு? கடைக்காரருக்கு கடிதம் எழுதிய திருடன்!
கேரளாவில் திருட சென்ற கடையில் எதுவும் கிடைக்காததால், கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு
கேரள மாநிலம் வயநாட்டில், குந்நங்குளம் என்னும் பகுதியில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில் திருடன் ஒருவன் கடந்த 10ஆம் தேதி திருட முயன்றுள்ளார்.
இதில் இரண்டு கடைகளிலிருந்து திருடிய பணத்துடன் பக்கத்தில் இருந்த ஆண்களுக்கான ஆடை கடையில் திருட கடையின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
கடிதம்
கடையில் உள்ள கல்லாப்பெட்டி காலியாக இருந்ததுடன், திருடவும் அங்கே எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் ஒரு ஜோடி ஆடையை மட்டும் எடுத்து விட்டு, உடைக்கப்பட்ட கதவின் கண்ணாடி துண்டில்
”கடைக்குள் எதுவும் இல்லை என்றால் எதற்காக கடையை மூடினாய், கண்ணாடிக் கதவாச்சும் தப்பித்து இருக்கும்” என கடைக்காரருக்கு குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சி
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்பேட்டா போலீசார் கடையின் சிசிடிவி காட்சிகளையும் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் திருடன் வயநாடு, களிப்பறம்பு பகுதியை சார்ந்த விஸ்வராஜ் என்பது தெரியவந்தது. விசாரணையில் கேரளா முழுவதுமாக பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் இவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
திருமணத்திற்கு பின் கணவர் பெண் என அறிந்த காதலி... அதிர்ச்சியில் இளம்பெண்!