ஸ்பைடர்மேன் போல் நுழைந்த திருடன் : வைரலாகும் வீடியோ

By Irumporai Jun 04, 2022 12:30 AM GMT
Report

புதுடெல்லியில் திருடன் ஒருவன் கொள்ளையடிப்பதற்கு ஸ்பைடர்மேன் போல் வீடுகளின் மேல் ஏறி நுழைந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புது டெல்லியில் கஜூரி காஸ் பகுதியில் சுரேந்தர் சிங் என்பவரது வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கடந்த 1-ந்தேதி அதிகாலை 2.17 மணியளவில் சுரேந்தர் வீட்டிற்கு திருடன் ஒருவன் வந்துள்ளான்.

அவன் வீட்டிற்குள் நுழைவதற்கு வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி அதன்பிறகு தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பிகளில் தொங்கி ஸ்பைடர் மேன் போல் வீட்டிற்குள் நுழைந்துள்ளான்.

அதன்பிறகு வீட்டிலிருந்த அலமாரி ஒன்றிலிருந்து தங்கச் செயின், மோதிரம், மொபைல் போன் ஆகியவற்றை திருடியுள்ளான். அப்போது திடீரென விழித்த சுரேந்தரின் அம்மா திருடன் குறித்து சத்தம் போடவே வாசல் வழியாக திருடன் தப்பி ஓடியுள்ளான். சுமார் அரைமணி நேரம் அந்த வீட்டிற்குள் திருடன் இருந்துள்ளான்.

இதையடுத்து சுரேந்தர் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ இணைய்த்தில் வைரலாகி வருகிறது.